JUST IN
  • BREAKING-NEWS ‌தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

சொந்த மண்ணில் தென்னாப்ரிக்கா தொடர்: மீண்டெழுமா இந்திய அணி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் நடைபெறவுள்ள தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

image

மீண்டெழுமா இந்திய அணி?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி எப்போதும் தனித்துவமான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இருப்பினும் சமீபத்தில், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இருபது ஓவர் தொடரில் 5க்கு பூஜ்யம் என வரலாற்று வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு முன்னனி வீரர்களின் மோசமான ஆட்டமும், குறிப்பிடத்தக்க பங்களிப்பை செலுத்திவந்த இதர வீரர்களில் சிலர் காயம் காரணமாக விலகியதுமே முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகிறது.

image

நியூசிலாந்து தொடர் முழுவதும் கேப்டன் விராட் கோலியின் ஆட்டத்திறன் மிகவும் கவலையளிக்கும் விதமாகவே இருந்தது. ரன் மெஷின் என்றழைக்கப்படும் அவர், 3 ஒரு நாள் போட்டிகளிலும் சேர்த்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரையில் 4 இன்னிங்ஸ்களிலும் கோலி 38 ரன்களை மட்டுமே சேர்த்தார். ரஹானே, புஜாரா உள்ளிட்ட அனுபவ வீரர்களும் டெஸ்ட் தொடரில் பெரியளவில் ரன்களைச் சேர்க்கத் தவறினர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு: ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்படுகிறதா ?

தவன், ரோகித் ஆகிய சீனியர்கள் காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகவே, அவர்களுக்கு மாற்றாக பிரித்திவ் ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். பிரித்திவ் ஷா ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மயங்க் அகர்வால் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்கவில்லை.

image

பந்துவீச்சிலும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவே ஏற்பட்டது. அணியின் பெரும் பலமாக பார்க்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஒரு நாள் தொடரில் மொத்தம் 30 ஓவர்கள் வீசியபோதிலும், ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோல் இளம் வேகப்புயல் நவ்தீப் சைனியும் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. சாஹல், சர்தூல் தாக்கூர், குல்தீப்யாதவ், ஜடேஜா, முகமது ஷமி ஆகியோரிடமிருந்து சுமாரான ஆட்டமே வெளிப்பட்டது. டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோரும் பெரியளவில் ஜொலிக்கவில்லை.

"அடடா என்னவொரு கண்கொள்ளா காட்சி"- சிஎஸ்கே பதிவிட்ட புகைப்படம் !

இந்நிலையில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாப்ரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவன், புவ்னேஷ் குமார் ஆகிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு மருந்தாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என நம்பலாம்.

Advertisement: