ஏரியில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சோகம்

Mother-and-two-daughters-drowned-in-lake-near-Chengalpattu

செங்கல்பட்டு அருகே ஏரியில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்தனர்.


Advertisement


பொன்விளைந்த களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது பத்து வயது மகள் சுபாஷினி மற்றும் அவரது உறவினர் மகள் தேவதர்ஷினி உடன் ஏரியில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. ஆகவே அவர்கள் மூவரையும் தேடி உறவினர்கள் சென்றுள்ளனர்.

image


Advertisement

அங்கு துணி துவைக்க எடுத்துச் சென்ற பொருட்கள் அப்படியே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரியில் இறங்கி தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சடலமாக ஒருவரை மீட்டுள்ளனர். அதன்பின் ஒன்றன்பின் ஒருவராக சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து அப்பகுதி மக்கள் கெடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலிசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் ராஜேஷ்வரியின் கணவன் இதேபோல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

image


Advertisement

இதனிடையே நீச்சல் தெரியாமல் ஏரியின் ஆழமான பகுதிக்குள் சென்று பொதுமக்கள் குளிப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது எனப் ஊர்மக்கள் புகார் கூறுகின்றன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement