மேட்டூர் அணையில் மிதந்த சடலம் - போலீஸ் விசாரணை

The-body-of-the-mysterious-man-who-was-found-dead-in-the-reservoir-of-Mettur-Dam-is-being-investigated-by-the-police


மேட்டூர் அணையின் நீர்த்தேக்கத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

சேலம் மாவட்டம் தாதகாபட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சண்முகராஜ் (42). டைலர் வேலை செய்துவந்த இவர், இன்று மேட்டூர் அணையின் வலது கரை நீர்த்தேக்க பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்தத் தகவலை அப்பகுதி மீனவர்கள் மேட்டூர் காவல்துறையினர் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மேட்டூர் போலீசார் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image


Advertisement

அப்போது அவரைப் பரிசோதித்தபோது ஏடிஎம் கார்டு மற்றும் ஆதார் அட்டை மட்டும் இருந்தது. பதில் இறந்தவரின் பெயர் சண்முகராஜ் என்பதும் அவர் சேலம் தாதகாப்பட்டி சேர்ந்த டைலர் என்பதும் தெரியவந்தது. இவர் எதற்காக மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு வந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

இறந்துபோன சண்முகராஜ் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement