கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசம் மற்றும் கைகைளை சுத்தம் செய்யும் சானிடைஸர்களை கொண்டு வரலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இந்தியாவில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கடந்த திங்கட்கிழமை வெளியான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.
கொரோனா பாதிப்பு: ஜேஎன்யூ பல்கலையில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு ரத்து !
இந்த நிலையில்தான், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்துள்ளார். இது பல்வேறு மாநிலங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
‘சொல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது’: ஐடி ஊழியர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனை..!
இந்நிலையில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ ஓர் அறவிப்பை வெளியிட்டு இருக்கிறது, அதில் "கொரோனா வைரஸ் தொடர்பாக மாணவர்கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் முகக் கவசமும், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைஸர்களையும் தேர்வு மையத்துக்கு கொண்டு வரலாம்" என தெரிவித்து இருக்கிறது.
Loading More post
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
மீண்டும் ஒடுக்கப்படும் ஆங் சாங் சூச்சி: மியான்மர் போராட்டக் களத்தில் பதற்றம் அதிகரிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?