"இந்தியா வரட்டும் வெச்சுக்குறேன்" கடுப்பான கோலி ! கிண்டல் செய்த ஜான்சன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூசிலாந்தில் அண்மையில் முடிவடைந்த அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 2- 0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஓர் அணி படுதோல்வியடைந்ததால், இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும், கேப்டன் விராட் கோலி கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மோசமான திறனை இத்தொடரில் வெளிப்படுத்தியிருந்தார்.


Advertisement

image

கேப்டனாக பேட்ஸ்மேனாக தடுமாறும் கோலி ! 


Advertisement

மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட் செய்தபோது அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் இந்தியக் கேப்டன் விராட் கோலி கடுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். அவருடைய ஆக்ரோஷம் அளவுக்கு மீறி சென்றது. கோலியும், வில்லியம்சனும் நண்பர்கள் என்றாலும் இத்தகைய ஆக்ரோஷம் தேவையா என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

image

மேலும், மைதானத்தில் நிரம்பியிருந்த நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டினார். தோல்வியின் விளிம்பில் இருந்த கோலி, நியூசிலாந்து ரசிகர்களை நோக்கி "அவர்கள் (நியூசிலாந்து) இந்தியாவுக்கு வரட்டும் அப்போது நாங்க யாரென்று காட்டுகிறோம்" என கூறியதாக ஊடகங்களில் செய்தியாக வெளியாகி உள்ளது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் "இது எனக்கு சிரிப்பை வரவைக்கிறது" என கிண்டல் செய்துள்ளார்.


Advertisement

image

இதேபோல நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்பு மைதானத்தில் தனது நடவடிக்கை குறித்து கேள்வி கேட்ட நிருபருக்கு பதிலளித்த விராட் கோலி, "மைதானத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் தெரிந்துகொண்டு கேள்வியை கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று தெரியாமல் பாதி கேள்விகளை கேட்கக் கூடாது. அதையும் மீறி நீங்கள் சர்ச்சையை கிளப்ப விரும்பினால், இது சரியான நேரமும் இடமும் அல்ல. அன்று நடந்தது குறித்து போட்டியின் நடுவரிடம் பேசினேன், அதில் ஒரு பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துவிட்டார். நன்றி" என கோபமாக முடித்துக்கொண்டார்.

கேள்வி கேட்ட நிருபர்.. கடுப்பான விராட் கோலி ! நடந்தது என்ன ? 

இந்திய கேப்டன் விரோட் கோலியின் இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்ட பலரும் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement