“நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி உள்ளோம்” - இஸ்ரோ

“நிலவின் துருவப் பகுதிகளில், தரைக்கடியில் தண்ணீர் பனிகட்டியாக உறைந்துள்ளது. சந்திரயான் மூலம் கிடைத்த தரவுகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் நிலவின் வடதுருவத்தை விட தென்துருவத்தில் தண்ணீர் 2 மடங்கு நீர் பனிக்கட்டியாக உருகியிருப்பது தெரியவந்துள்ளது” - இஸ்ரோ
நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்த இஸ்ரோ
நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்த இஸ்ரோபுதிய தலைமுறை

செய்தியாளர் - பால வெற்றிவேல்

சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் மான்சினஸ் பள்ளத்தாக்கிற்கு அருகே தரையிறங்கியது. அதன்பின் சந்திரயான் 3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவர் தங்களது ஆறு அறிவியல் ஆய்வுத் திட்டங்களையும் முதல் கட்டமாக வெற்றிகரமாக முடித்த நிலையில், தரவுகளை தொடர்ச்சியாக பூமிக்கு அனுப்பியது.

சந்திரயான் 3
சந்திரயான் 3

ஏற்கனவே சந்திரயான் 2ன் உந்து விசை கலன் நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் நிலையில், அதன் தரவுகளும் தொடர்ச்சியாக இஸ்ரோ விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்டன. சந்திரயான் 1,2,3 ஆகிய திட்டங்கள் மூலம் கிடைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு இந்திய மற்றும் சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக பகுப்பாய்வுகளை மேற்கொண்டனர்.

நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்த இஸ்ரோ
‘ஸ்லிம் விண்கலம்’ நிலவில் தரையிறங்க உதவிய சந்திராயன் 2; இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஜப்பான்!

அகமதாபாத்தில் செயல்படும் இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, சந்திரயான் திட்டத்தின் தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தது.

குறிப்பாக நிலவில் தண்ணீர் இருக்கும் பகுதிகள் குறித்தும், ஒருவேளை தண்ணீர் இருந்திருந்தால் எப்படி ஆவி ஆகி இருக்கும் என்பது குறித்தும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

அதற்காக நிலவில் உள்ள நீர் பனியின் தோற்றம் மற்றும் பரவலைப் புரிந்துகொள்வதற்காக ரேடார், லேசர், ஆப்டிக்கல், நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், அல்ட்ரா வயலட் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் தெர்மல் ரேடியோமீட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு கருவிகளை ஆய்வுக் குழு பயன்படுத்தியது.

அதில் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறியப்பட்டுள்ளன. அந்த தண்ணீர் பனிக்கட்டியாக உருகி இருப்பதாகவும், அவை ஒரு சில மீட்டருக்கு உள்ளதாகவும், துருவ மேற்பரப்பை போல 5 முதல் 8 மடங்கு பனிக்கட்டிகள் உறைந்து இருப்பதாகவும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.

நிலவில் நீர் இருப்பதை உறுதிசெய்த இஸ்ரோ
நிலவின் தென்துருவத்தில் அதிசயம் - இஸ்ரோ கண்டுபிடித்த ஆச்சர்யம்!
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோஇஸ்ரோ

இவ்வாறு நிலவில் தண்ணீர் இருப்பது பூமியைப் போல எரிமலை வெடிப்புகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகளையும் உறுதி செய்திருப்பதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட துருவப் பகுதியில் உள்ள நீர் பனியின் அளவு தென் துருவப் பகுதியை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.

நிலவின் வட மற்றும் தென் துருவத்தில் அவற்றின் புற தோற்றங்கள், அவற்றிலுள்ள பள்ளங்கள், மேடுகள், எரிமலை வெடிப்புகள், சூரியன் புகாத பகுதிகள் என வெவ்வேறு அளவீடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிய தரவுகள் கிடைத்துள்ளன. இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலவின் துருவ வரைபடங்களில் பனிக்கட்டி செறிவுள்ள உள்ள பகுதிகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

நிலவில் தண்ணீர்
நிலவில் தண்ணீர்இஸ்ரோ

தற்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதன் மூலம் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேறி தங்கி நீண்ட காலம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி உள்ளதாக இஸ்ரோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி நிலவில் சென்று காலடிகளை பதிக்கவுள்ள மனிதர்களுக்கு அவர்களின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நிலவின் தரைப்பகுதிக்கு அடியிலே இருக்கும் இந்த தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சந்திரயான் 4 திட்டத்தில் சந்திரனின் துருவப் பகுதியில் தரைப்பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com