சுட்டெரிக்கும் கோடை... சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்குமா? ஏரிகளின் நிலை என்ன?

சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் நீர் நிலைகள் வறண்டு காணப்படுவதால், மக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
கோப்புப்படம்
கோப்புப்படம்pt web

கோடை வெப்பம் அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் அங்கிருக்கும் நீர் நிலைகளின் நிலை என்ன என்பது குறித்து புதிய தலைமுறையின் செய்தியாளர்கள் வழங்கியுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை சென்னை சோழவரம் ஏரி தனது முழு கொள்ளளவில் 10% நீர் இருப்பை மட்டுமே கொண்டுள்ளது. மொத்தமாக 1081 மி.கன அடி என இருக்கும் நிலையில் தற்போது மொத்தமாகவே 108 மி.கன அடி நீர் மட்டுமே உள்ளது. அதேபோல சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிற பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. கடந்தாண்டு இதேசமயத்தில் சோழவரம் ஏரியில் 774 மி.கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
ஆரஞ்ச் அலர்ட்: மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

தற்போதைய சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 2368 மி.கன லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இதில் 80 முதல் 90% வரை இந்த நீர்த்தேக்கங்களில் இருந்துதான் பெறப்படுகிறது. சென்னையின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படுவதால், இங்கிருக்கும் குடிநீர் ஆதாரங்களைக் கொண்டுதான் சென்னை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதே நிலை நீடிக்கும் சூழலில் பெங்களூருக்கு ஏற்பட்ட நிலைபோன்றே சென்னைக்கும் ஏற்படும் என்று சூழலியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சோழவரம் ஏரியைப் போன்ற நிலைதான், சென்னையின் பிற நீர் ஆதாரங்களிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com