மாஸ்டர் படத்துடன் மோதுவதா? : மே 1ல் வெளியிட ‘சூரரைப் போற்று’ படக்குழு திட்டம்

Suriya-Soorarai-Pottru-to-postpone-release-to-avoid-clash-with-Vijay-Master

விஜயின் ‘மாஸ்டர்’ படத்துடன் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ மோதுவதை தவிர்க்க அப்படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


Advertisement

நடிகர் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை ‘துரோகம்’, ‘இறுதிச் சுற்று’ போன்ற படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். "ஏர் டெக்கான்" உரிமையாளரான ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் டீசர் கடந்த மாதம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது.

image


Advertisement

அதனையடுத்து இப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை விமானநிலையத்தில் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்றுள்ளது. இதில் சூர்யா, "ஸ்பைஸ் ஜெட்" விமானத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் உள்பட பலரும் கலந்துக் கொண்டனர். மேலும், அகரம் சார்பில் 100 பள்ளி மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

‘இனி வரும் காலம்.. வசந்த காலம்’ - மாஸ்டர் படத்தால் குதூகலத்தில் ஷாந்தனு

இப்படத்தின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது ஜிப்ஸி படக்குழு..!

இந்நிலையில், விஜய் படம் வெளியாகும் அதே நேரத்தில் ‘சூரரைப் போற்று’ வெளியானால் அது வசூல் ரீதியாக சில தடைகளை உருவாக்கும் என்பதால் இதன் ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. ‘மாஸ்டர்’ படம் வெளியானால் அதிகப்படியான திரையரங்கள் அதற்கே ஒதுக்கப்பட்டுவிடும். ஆக திட்டமிட்டபடி சூர்யாவின் படத்திற்கு திரையரங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

image

ஆகவேதான் இந்த முடிவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தள்ளி வைப்பதாக இருக்கும் பட்சத்தில் இந்தப் படத்தினை ஏப்ரல் 14 அல்லது மே 1 ஆகிய இரு தேதிகளில் ஏதாவது ஒன்றை தயாரிப்பு நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிகிறது.

அப்படி வெளியானால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ள தனுஷின் 'ஜகமே தந்திராம்', ஜெயம் ரவியின் 'பூமி', விஷாலின் 'சக்ரா' ஆகிய மூன்று படங்களுடன் ‘சூரரைப் போற்று’ மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இந்த மூன்று படங்களும் ஏற்கெனவே மே 1 ஆம் தேதி வெளியாவதை உறுதி செய்துள்ளன.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement