“தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்”- நடிகர் ரஜினி

Rajinikanth-speaks-about-CAA

நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருப்பதாக ‌நடிகர் ‌ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

சிஏஏ, என்பிஆர் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்து தெரிவித்தார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினரை சந்தித்து பேச தயாராக இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். ‌அதன்பேரில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை உலமா சபை குருக்கள் சந்தித்துப் பேசினர்.

image


Advertisement

அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் அவர்கள் விளக்கி கூறியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலமா சபையின் தலைவர் காஜா மொய்னுதீன் பாகசி, இஸ்லாமிய மக்களின் அச்சத்தை நடிகர் ரஜினிகாந்த் புரிந்துகொண்டதாக கூறினார்.

ரஜினியும், கமலும் மக்களுக்கு இதுவரை என்ன செய்தார்கள்...? விஜய பிரபாகரன் ஆவேசம்..!

image


Advertisement

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தன் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்தது தொடர்பாக குறிப்பிட்டுள்ள ரஜினிகாந்த், அவர்களது ஆலோசனைகளை கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் கருத்தை ஆமோதிப்பதாகவும் ரஜினி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement