தருமபுரி அரசு மருத்துவமனையின் பிணவறையில் சடலங்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆசியக் கோப்பை நடத்தும் இடத்தை இன்னும் முடிவு செய்யவில்லை"- ஈசான் மணி
ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்க திட்டம் போடும் டெல்லி கேபிடல்ஸ் !
இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையின் பிணவறையில் சடலங்களுக்கு துப்புரவுத் தொழிலாளர்கள் பிரேத பரிசோதனை செய்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஆண் சடலம் ஒன்றிற்கு ஊழியர்கள் மூவர் பிரேத பரிசோதனை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. பிரேத பரிசோதனையின்போது மருத்துவர்கள் இருப்பதில்லை என்றும், உதவியாளர்களும், துப்புரவுத் தொழிலாளர்களுமே அந்த வேலையைச் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கொலை உள்ளிட்ட வழக்குளில் உண்மை நிலையை கண்டறிய முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மருத்துவமனையின் டீன் சீனவாச ராஜு, உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?