தேனி வனப்பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோடைக் காலம் நெருங்கி வரும் சூழ்நிலையில் தேனி மாவட்ட காட்டுப் பகுதிகளில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.


Advertisement

தேனி மாவட்டம் போடி அருகே அத்தியூத்து வெள்ளையன் சதுப்பு வனப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் இயற்கை வளம் அழிந்து பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.

image


Advertisement

 தேனி மாவட்டம் போடியை சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அரிய வகை உயிரினங்களும் உயர்ந்த வகை மரங்களும் இருக்கும் இடமாகும். இப்போது அத்தியூத்து வெள்ளையன் சதும்பு வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதற்கு சமூக விரோதிகள் அடுப்புக்கரி மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்கும் தீயை வைத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது.

சுற்றுச்சூழல் போராளி கிரேட்டாவுக்கு எதிராக களமிறங்கிய இளம்பெண்..! 

image


Advertisement

இதனால், அரிய வகை மரங்களும் வனவிலங்குகளும் அழிந்து வருவதோடு பலன் தரக்கூடிய இலவம், மா, எலுமிச்சை போன்ற மரங்கள் தீயில் கருகி வருகின்றன. வனத்துறையினர் உடனடியாக காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement