சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை நாமக்கல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நாமக்கல் மாவட்டம் முட்டாஞ் செட்டியை சேர்ந்த சத்துணவு உதவியாளர், கனிமொழியின் மகனுக்கு உயர் நீதி மன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டதாக தெரிகிறது. சதீஸ்குமாரின் வார்த்தையை நம்பிய கனிமொழி மகனுக்காக லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ தயாரிப்பாளருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் மோதலா?
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராடக் கூடாது என சட்ட விதிகள் உள்ளனவா?: உயர்நீதிமன்றம்
ஆனால் கூறிய படி, கனிமொழியின் மகனுக்கு சதீஸ் வேலை வாங்கித்தரவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிமொழி நாமக்கல் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சதீஸ்குமார் மீது புகார் அளித்துள்ளார். கனிமொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் வழக்கறிஞர் சதீஸ்குமார், கனிமொழி மட்டுமின்றி மேலும் 11 பேரிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி 37 லட்ச ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து சதீஸ்குமாரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு