"கோலியை குறி வச்சு தூக்குனோம்" ட்ரெண்ட் போல்ட் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விராட் கோலியை ரன் எடுக்க விடாமல் குறிவைத்து அவரை அவுட்டாக்கினோம் என்று நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.


Advertisement

image

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாளான இன்று 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.


Advertisement

“ஆசிய லெவன் அணிக்காக இன்னும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை”- சவுரவ் குங்குலி 

image

இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி 19 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி முதல் இன்னிங்ஸிலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று போட்டி தொடங்குவதற்கு முன்பாக தெரிவித்திருந்தார் ட்ரெண்ட் போல்ட். சொன்னபடியே கோலியின் விக்கெட்டை இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்தார்.


Advertisement

image

தோல்வியில் இருந்து தப்புமா இந்தியா ? மூன்றாம் நாளில் மீண்டும் திணறல் ! 

இது குறித்து பேசிய போல்ட் "விராட் கோலிக்கு ஆட வரும்போது சிறப்பாகவே விளையாடினார். ஆனால் ஒரு சில பந்துகளை தவறாக ஆடினார், அது பவுண்டரிக்கு சென்றது. ஆனால் நாங்கள் திட்டத்துடன்தான் பந்துவீசினோம், கோலிக்கு ஷார்ட் பந்துகளை அதிகமாக வீசினோம். அவரின் விக்கெட்டை வீழ்த்த குறிவைத்து செயல்பட்டோம். எங்கள் திட்டத்தின்படியே ஷார்ட் பந்தை அடிக்க முற்பட்ட அவுட்டானார் கோலி. புஜாராவின் விக்கெட்டை வீழ்த்தியதும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் சிறப்பாக பந்து வீசியிருப்பது உத்வேகத்தை தருகிறது" என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement