இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணியில், அறிமுக வீரர் கைல் ஜேமிசன் மற்றும் அனுபவ வீரர் டிம் செளதி தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
விசா கட்டுப்பாடுகள் காரணமா?: இந்திய நிறுவனங்களில் அதிகரிக்கும் அமெரிக்க ஊழியர்கள்!
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டாம் லேதம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு ஆட்டக்காரர் டாம் பிளெண்டல் 30 ரன்களில் பெவிலியன் திரும்ப, கேப்டன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் ஜோடி சேர்ந்து சீரான வேகத்தில் ரன்கள் சேர்த்தனர். தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ராஸ் டெய்லர், 44 ரன்களில் கேட்ச் ஆனார்.
நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் 89 ரன்களில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவை விட நியூசிலாந்து அணி தற்போது 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
''இப்படிக்கு... தரணேஷ் நண்பர்கள், 3-ம் வகுப்பு'' - நன்றி கடிதத்தால் நெகிழ்ந்த ஆட்சியர்!
முதல் நாளில் மழையின் தாக்கம் காரணமாக பந்துவீச்சுக்கு சற்றே சாதகமாக இருந்தது. பின்னர், இரண்டாம் நாளில் கொஞ்சம் மாறியது. அதனால், பேட்டிங்கிற்கு கைகொடுத்தது. நாளை மைதானம் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், நியூசிலாந்து அணியை விரைவில் ஆட்டமிழக்க செய்து இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்தால் தோல்வியை தவிர்க்கலாம். இல்லையென்றால் நியூசிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசம் வைத்துவிடும்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு