#TopNews களைகட்டிய சிவராத்திரி முதல் 165 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி வரை..

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகம் உள்பட நாடு முழுவதும் சிவராத்திரி விழா கோலாகல கொண்டாட்டம். சிதம்பரம், தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் சிவாலயங்களில் திரண்டு மக்கள் வழிபாடு.


Advertisement

கோவை ஈஷா யோகா மையத்தில் களைகட்டிய மகா சிவராத்திரி கொண்டாட்டம். முக்கிய பிரபலங்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு. நடனமாடி ஜக்கி வாசுதேவ் உற்சாகம்.

image


Advertisement

சிறுபான்மையினரின் அரணாக அதிமுக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை. அதிமுக மக்களை ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது. வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவு.

image


Advertisement

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதில் பணம் தரும் துணைநிலை ஆளுநரின் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. மேல்முறையீடு செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி. முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது இந்திய அணி.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement