JUST IN

 ரிலீஸுக்கு முன்பு  ‘சூரரைப் போற்று’ படத்தை பார்க்க விரும்பும் விஜய்? - காரணம் என்ன?  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விஜய், தனது 65வது படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் ‘சூரரைப்போற்று’ படத்தைப் பார்க்க விரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் மாத இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதால் இந்த மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு முடிந்ததும் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

விஜய் ஏற்கனவே சுதா கொங்கரா, வெற்றிமாறன் மற்றும் பாண்டிராஜ் ஆகியோரிடத்தில் கதைகளைக் கேட்டுள்ளார். ஆனால், விஜய் தனது அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநரை இன்னும் இறுதி செய்யவில்லை. இந்நிலையில், இப்போது சுதா கொங்கரா உடனான படம் குறித்த ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. விஜய் தனது 65 வது படத்திற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன்பாக இயக்குநர் சுதா கொங்கரா, இயக்கியுள்ள ‘சூரரைப்போற்று’ படத்தைப் பார்க்க விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.

‘யாரு, நம்ம பாண்டியம்மாவா இது?’ - புதிய தோற்றத்தில் ‘பிகில்’ இந்திரஜா சங்கர்

இயக்குநர் சுதா கொங்கரா விவரித்த கதையை விஜய் மிகவும் விரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே அவரது படப்பிடிப்பு குறித்து அறிந்து கொள்ள ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியாவதற்கு முன்பே விஜய் பார்க்க விரும்புகிறார். சுதா, ஏற்கனவே விஜய்க்கு இந்தப் படத்தின் ஒரு காட்சியைப் போட்டுக் காட்டியதாகத் தெரிகிறது. ஆகவே விஜயும் சுதாவும் இது சம்பந்தமாக இறுதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகப் பேச்சு அடிப்படுகிறது. விரைவில் இந்தத் திட்டம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

image

விஜய்யின் 'மாஸ்டர்' படத்துடன் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படமும் ஒன்றாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளியானால் அந்தப் படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போது சுதாவின் படத்தில் ஒருவேளை விஜய் நடித்துக் கொண்டிருப்பார்.

 

Advertisement: