மகளிருக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 7-ஆவது மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டிகள் A மற்றும் B என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தவறான உறவை தட்டிக்கேட்ட நபர் படுகொலை
ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, வங்கதேச அணிகளுடன் இந்திய அணி A பிரிவில் உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தாய்லாந்து ஆகிய அணிகள் B பிரிவில் உள்ளன. ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதையடுத்து பிப்ரவரி 24-ஆம் தேதி வங்கதேச அணியுடனும், 27-ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனும், 29-ஆம் தேதி இலங்கை அணியுடனும் இந்தியா மோதவுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதி புகழ்பெற்ற மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய நபர் கொரோனா வார்டில் அனுமதி
இதுவரை 6 முறை நடந்துள்ள இத்தொடர்களில், ஆஸ்திரேலிய அணி நான்கு முறையும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா ஒரு முறையும் சாம்பியனாக மகுடம் சூடியுள்ளன. மகளிர் T20 உலக்கோப்பை தொடர்களில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டி வரை முன்னேறியதில்லை. 2009, 2010 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் அரையிறுதி வரை சென்றதே இந்திய மகளிர் அணியின் அதிகப்பட்ச முன்னேற்றமாகும். ஹர்மன் ப்ரீத் தலைமையில் ஸ்மிரித்தி மந்தானா, பூனம் யாதவ் உள்ளிட்ட இளம் வீராங்கனைகளுடன் இந்திய அணி இம்முறை களமிறங்கவுள்ளது.
கிரிக்கெட் வல்லுநர்களால் நடப்பு தொடரில் மகுடம் சூட வாய்ப்புள்ள அணிகளாக கணிக்கப்பட்டுள்ள பட்டியலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் இந்திய அணியும் இடம்பெற்றுள்ளது.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு