ஐபிஎல் தொடருக்கு பின்பு ஓய்வுப் பெறுகிறார் ஹர்பஜன் சிங் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பின்பு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஓய்வுப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement

image

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடர்களில் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதாகும் ஹர்பஜன் சிங் கடைசியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 2016-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அதற்கு முன்பு 2015-இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு, அவர் சர்வதேச போட்டிகளுக்கு இந்திய அணிக்காக பங்கேற்கவில்லை.


Advertisement

image

1998ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன் சிங் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட்டுகளை 25 முறை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் கலக்கியுள்ள ஹர்பஜன் சிங் 269 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அஜித்தை விஜய்க்கு எதிராக காய் நகர்த்துகிறதா அதிமுக? 


Advertisement

image

இந்திய அணிக்காக விளையாடி 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவர் இதுவரை தனது ஓய்வை அறிவிக்கவில்லை. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுப்பெற இருப்பதாக ஹர்பஜன் சிங்கின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement