ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தர வரிசைப் பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தன்னுடைய முதலிடத்தை இழந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்துள்ளது இந்திய அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதிலும், தோல்விக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பும்ராவின் மோசமான பாஃர்மும் அமைந்துவிட்டது.
மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் போனதோடு, 167 ரன்களையும் விட்டுக் கொடுத்துள்ளார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என அழைப்படும் பும்ரா, இந்த முறை டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். நேற்றையப் போட்டியிலும் அதுதான் நடந்தது. பும்ராவிடம் இருந்து ரசிகர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Loading More post
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை