வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பது நிரூபணம்- மு.க.ஸ்டாலின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது வரை ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக பாஜக 13 இடங்களில் முன்னிலை கண்டுள்ளது. அதேசமயம் காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில் அதனைவிட அதிக இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது.

image


Advertisement

“இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி”- பிரஷாந்த் கிஷோர் 

இந்நிலையில் டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், “ பெரும்பாலான மக்கள் ஆதரவுடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துகள்.

“பீடத்தில் தாமரையை வைக்காமல்  விளக்குமாறை டெல்லி மக்கள் வைத்துவிட்டனர்”- இல.கணேசன் 

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதையே‌ டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேசத்தின் நலன் கருதி கூட்டாட்சி உரிமைகள், மாநில நலன்கள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement