[X] Close >

சென்னை விமானநிலையத்தில் இசை வெளியீடு ? - ‘சூரரைப் போற்று’ அப்டேட்

Suriya-next-to-be-first-Tamil-film-to-have-audio-launch-in-Chennai-International-Airport

 ‘சூரரைப் போற்று’ இசை வெளியிட்டு விழா சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

நடிகர் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இதனை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இவர் இயக்கிய ‘இறுதிச் சுற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. ஆகவே ‘சூரரைப் போற்று’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் ‘வெய்யோன் சில்லி’ என்ற இரண்டாவது பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் தகவலை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

image


Advertisement

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழாவை சென்னை சர்வதேச விமானநிலையத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழா விமான நிலையத்தில் நடப்பது இதுவே முதன் முறையாகும். ஆகவே மிகப் பிரம்மாண்டமான அளவில் இவ்விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆஜராக அவகாசம் கோரும் நடிகர் விஜய் !

முன்னாள் ராணுவ கேப்டனும் ஏர் டெக்கான் நிறுவனரும் ஆன ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே விமானநிலையத்தை தேர்வு செய்து படக்குழு இசை வெளியீடு நடத்த உள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ நாயகி அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.


Advertisement

image

இந்தி நடிகர் பரேஷ் ராவல், தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் காளி வெங்கட், கருணாஸ் எனப் பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குனீத் மோங்காசின் சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. மேலும் இந்தப் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துடன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close