நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டி: இந்தியா பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


நியூசிலாந்து அணிக்கு எதிராக வெல்லிங்டனில் நடைபெறவுள்ள 4ஆவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.


Advertisement

Image

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் மூன்று டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், 4வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 12:30 மணியளவில் தொடங்குகிறது.


Advertisement

Image

ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை 3-0 என்ற கணக்கில் ஏற்கெனவே இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ள நியூசிலாந்து அணி வெற்றிக்கான வேட்கையில் உள்ளது. தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி வெற்றி வேட்டையை தொடரும் மு‌னைப்பில் விளையாடவுள்ளது.

4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி இன்றையப் போட்டிக்கான டாஸை வென்று பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement