JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

மணல் கடத்திய லாரியை விடுவிக்குமாறு விஏஓவை மிரட்டிய வருவாய் ஆய்வாளர் - ஆடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பூர் அருகே மணல் கடத்தியபோது பிடிபட்ட லாரியை விடுவிக்குமாறு, கிராம நிர்வாக அலுவலரை வருவாய் ஆய்வாளர் அலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ஆட்சியர் பல்லடம் அருகே காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான கார்த்திக், கடந்த 24-ஆம் தேதி அப்பகுதியில் மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்துள்ளார். அப்போது, அவருக்கு பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரியிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்துள்ளது. மணல் லாரியை விட்டுவிடுமாறும், ஆட்சியர் முதல் வட்டாட்சியர் வரை அனைவரையும் மணல் கடத்துபவர்கள் கவனிப்பதாகவும் கார்த்திக்கிடம் ஈஸ்வரி கூறியுள்ளார்.

image

(மாதிரிப்படம்)

அத்துடன் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மணல் லாரியை பிடிக்கும் அதிகாரமில்லை என்றும் மிரட்டியுள்ளார் ஈஸ்வரி. இந்த அலைபேசி உரையாடல் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


வீட்டிலேயே இயற்கை முறையில் சுத்தமான குடிநீர்.. அசத்தும் இந்திரகுமாரின் முயற்சி


நேர்மையான அதிகாரியை கடமையைச் செய்ய விடாமல் உயர் அதிகாரி மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது, உரிய விசாரனை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Advertisement: