சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர் எங்கேயோ இருந்து கொண்டு தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவுகளை இணையத்தில் நிகழ்த்தி வருகிறார். அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே கூறி இருந்தது.
இந்நிலையில், குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல், நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. வழக்கில் தலைமறைவாக உள்ள நபரைக் கண்டால் தகவல் அளிப்பதையே ப்ளூ கார்னர் நோட்டீஸ் என அழைக்கப்படுகிறது. நித்யானந்தாவின் இருப்பிடத் தகவலைப் பெற ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.
Loading More post
ரெய்னா கிரீசுக்கு வந்தபோது டிவிக்கு முன்னர் ஆரத்தி எடுத்து வழிபட்ட ரசிகர்!
அம்பத்தூரில் வாக்குக்கு பணம் பட்டுவாடா - அதிமுகவினர் இருவர்மீது வழக்குப்பதிவு
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்