JUST IN
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரம் குறித்து கவலை தெரிவித்தது ஐநா மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS ‌டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு

நியூஸிலாந்து தொடரில் தவான் விலகல் - பிருத்வி ஷா, சஞ்சு சாம்சன் சேர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த பயணத்தின்போது 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோள்பட்டை காயத்தின் காரணமாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே அவர் விலகியிருப்பதாக பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. அத்துடன் அவருக்கு பதிலாக ஒருநாள் தொடரில் பிருத்வி ஷா-வும், டி20 தொடரில் சம்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 தொடருக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தகூர்.

image

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சிவம் டூபே, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தகூர், கேதர் ஜாதவ்.

வாழைப்பழத்தை நீங்களே உரியுங்கள் - பாராட்டுகளை பெற்ற டென்னிஸ் நடுவர்

Advertisement: