JUST IN

பஹத், நஸ்ரியா, கவுதம் மேனன்: தமிழகத்திலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ட்ரான்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மலையாளத்தின் ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தை இயக்கியவர் அன்வர் ரஷீத். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இடைவெளி விட்ட அன்வர் தற்போது பஹத் பாசில் நடிக்கும் ‘ட்ரான்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

image

இந்தப்படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். பஹத்தை திருமணம் செய்துகொண்ட பின்னர் நடிப்புக்கு இடைவெளி விட்ட நஸ்ரியா, ‘கூடே’ திரைப்படத்தில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் நஸ்ரியா திரையில் தோன்றவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ட்ரான்ஸ் படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று மீண்டும் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

image

இந்த போஸ்டரில் இயக்குநர் கவுதம் மேனனின் படமும் இடம்பெற்றுள்ளது. கோட் சூட் என கவுதம் மேனம் ஸ்டைலான லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டரை நடிகர் பஹத் பாசில் வெளியிட்டுள்ளார். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் மூலம் பஹத் தமிழில் அறிமுகமான நிலையில் நஸ்ரியா, கவுதம் மேனன் ஆகியோரும் நடித்திருப்பதால் ட்ரான்ஸ் திரைப்படத்திற்கு தமிழகத்திலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே தெரிகிறது.


மன்னிப்பு கேட்கமாட்டேன் என ரஜினி ஆவேசம்.. ஆதரவும்.. எதிர்ப்பும்..!


 

Advertisement: