நிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிர்பயா வழக்கின் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா என்பவர், தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Advertisement

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய ஆணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இதற்கு எதிராக பவன்குமார் குப்தா என்ற குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Image result for உச்சநீதிமன்றம்


Advertisement

அதில், சம்பவம் நடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தாம் சிறாராக இருந்த காரணத்தினால், தூக்கு தண்டனையை நிறுத்திவைக்குமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் மோசடியான ஆவணங்களை தாக்கல் செய்ததோடு, தமக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement