வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண் - சட்டென செயினை பறித்துச்சென்ற திருடர்கள்

Robbers-theft-chain-a-Woman-from-front-her-house-in-Pudukottai

புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்மணியிடம் 13 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.


Advertisement

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சார்லஸ்நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மீனாள் (54). இன்று அதிகாலை வழக்கம்போல வீட்டு வாசலில் மீனாள் கோலமிட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், மீனாள் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மீனாள் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்திருக்கின்றனர்.

‘பரிசாக கிடைத்த ரூ.3 கோடி’ - காட்டுத்தீ பாதிப்புக்காக அளித்த செரீனா

அதற்குள் திருடர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோகர்ணம் போலீஸார், அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோலமிட்ட பெண்மணியிடம் 13 சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement