JUST IN

Advertisement

முகம் சிதைக்கப்பட்டு கொலை : கொலையாளிகளை பிடிப்பதில் போலீஸுக்கு சிக்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரியில் அடையாளம் தெரியாத வகையில் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வட்டவிளை என்ற இடத்தில் தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத அப்பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் கல்லால் கடுமையாக தாக்கப்பட்டு இறந்துகிடந்தார். அவ்வழியே சென்ற சிலர் இதைப்பார்த்து, காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

image


Advertisement

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இதுவரை தெரியவில்லை. கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் இருசக்கர வாகனத்தின் சாவி ஒன்று கிடந்தது. அந்த சாவியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

image

அவர் யார் ? என தெரிந்தால் மட்டுமே கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் ? என கண்டுபிடிக்க முடியும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


Advertisement
Related Tags : nagercoilkanyakumarimurder
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement