நாட்டில் நடைபெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், விசிக, சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்டவற்றில் சார்பில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் விசாரிக்கப்படாமல் உள்ளன. இந்தச்சூழலில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், செல்லுபடியாகும் என அறிவிக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் வினித் டான்டா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததோடு, அதை விரைவாக விசாரிக்கவும் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.
அப்போது ஒரு சட்டம் இயற்றப்படும்போது அது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இயற்றப்படுகிறதா, இல்லையா என்பதை தீர்மானிப்பது மட்டும்தான் எங்கள் வேலையே தவிர அதற்கு நாங்களாகவே அரசியல் சாசன அந்தஸ்தை வழங்க முடியாது என தலைமை நீதிபதி தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் கடினமான சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி எங்களின் நடவடிக்கை அமைதியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்றார்.
ஆனால் தற்போதுள்ள சூழலில் இந்த மனுக்களை விசாரித்தால் அமைதியான சூழலை உருவாக்க முடியும் என நினைக்கவில்லை எனத் தெரிவித்த தலைமை நீதிபதி இந்த விவகாரம் தொடர்பான வன்முறைகள் எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று கூறினார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்