திருச்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 16 வயது மகளை கடந்த 31-ஆம் தேதி முதல் காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இதனிடையே மாணவியின் வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், ஜனவரி 2-ஆம் தேதி மாணவியின் உறவினர் ஒருவர் செல்லும்போது மாணவியின் காலணி மட்டும் கிடந்துள்ளது. இதைக் கண்ட அவர் மாணவியின் உறவினர்களிடம் தகவல் கொடுத்தார். உறவினர்கள் வந்து பார்த்தபோது இறந்து கிடந்தது காணாமல்போன மாணவிதான் என்பதை உறுதி செய்தனர். மாணவியின் வாய் மற்றும் கால்கள் துணியால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய மதிக்குமார் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை திருச்சி சிறையில் அடைத்துள்ளனர். போலீசார் விசாரணையில், மதிக்குமார் தனக்கும் அம்மாணவிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் வேறு ஒருவருடன் மாணவி பழகி வந்ததை கண்டித்த பின்னரும் மாணவி கேட்காததால், காட்டுப்பகுதிக்குச் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'