வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
பொதுத்தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து வரும் 16-ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சி, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் நேரடியாக ஒளிப்பரப்படவுள்ளது. இதனை மாணவர்கள் காணும் வகையில் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்வதற்கு சுற்றறிக்கை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியின் உரையை பார்க்க வரும் 16-ஆம் தேதி பள்ளி மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய தலைமுறைக்கு விளக்கம் அளித்திருந்தார்.
வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது கட்டாயம் அல்ல. #PongalHoliday #TNGovt— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 28, 2019
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது கட்டாயம் அல்ல.” என தெரிவித்துள்ளார்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு