பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியிலிருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் சென்னை வர உள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் ஆளுநராக பதவியேற்று கொண்டார். அதனை அடுத்து, 4 மாதங்களாக அக்கட்சியின் தலைவர் பதவி காலியாகவே இருந்து வருகிறது. அடுத்த தலைவராக யார் வருவார் என்பது குறித்து அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விரைவில் அப்பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைமை சில மாதங்களாகவே ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாகப் பேச டெல்லியில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயப்பிரகாஷ் வருகிற 5ஆம் தேதி சென்னை வர இருக்கிறார். அன்றைய தினம் தமிழக பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கட்சியின் மேலிடத்துக்கு ஜெயப்பிரகாஷ் தெரிவிக்க உள்ளார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரை மேலிடம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்