JUST IN

Advertisement

21 டன் வெங்காயம் பறிமுதல்... வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டுவரப்பட்டதா..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீர்காழி அருகே உரிய ஆவணம் இன்றி மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 21 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு வழங்க கொண்டுவரப்பட்டதா என விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Advertisement

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர், தனிவட்டாட்சியர் பிரேம் சந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 21 டன் வெங்காயம் இருந்தது. இது குறித்து லாரி ஓட்டுநரான ஊத்தங்கரையை சேர்ந்த நந்தகுமாரிடம் விசாரித்ததில், மகாராஷ்டிராவில் இருந்து சீர்காழி அருகே திட்டை கிராமத்தில் உள்ள கலியமூர்த்தி என்ற வியாபாரிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

image


Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் - பெண்கள், சிறுவர்கள் மீது வழக்கு

ஆனால் வெங்காயம் கொள்முதலுக்கான எந்த ஆவணமும் இல்லாததால் 21 டன் வெங்காயத்துடன் லாரியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அதிக விலை ஏற்றம் உள்ள நிலையில் உரிய ஆவணம் இன்றி 21 டன் வெங்காயம் கிராம பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 கிலோ வெங்காயமே வாங்க சாமானியர்கள் சிரமப்படும் நிலையில் 21 டன் வெங்காயம் திட்டை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement