‘தளபதி 64’ படத்தில் விஜய் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 'தளபதி 64' படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கு முறையாக தலைப்பு வைக்காததால் தற்காலிகமாக ‘தளபதி64’ என இதனை குறிப்பிடுகின்றனர். விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்றது. அங்கு முகாமிட்ட படக்குழுவினர் விஜய் சேதுபதியும் விஜயும் பங்குபெற்ற காட்சிகளை படமாக்கினர். அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பார்வை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் படப்பிடிப்பை நடத்தினர். அங்கு படப்பிடிப்பு நடத்தியதற்கு சில சர்ச்சைகளும் கிளம்பியது.
இதனிடையே நேற்று விஜய் நடிப்பில், ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல நடன இயக்குநர் சதீஷ் இந்தப் பாடலுக்கான நடனத்தினை வடிவமைத்துள்ளார்.
இளம் நடன இயக்குநரும் நடிகருமான இவர், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் படத்திற்காக நடனமாடியது குறித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் இவருடன் சாந்தனு பாக்யராஜூம் கலந்து கொண்டுள்ளார். ஆகவே இந்தப் பாடல் படப்பிடிப்பில் ஒரு பகுதியாக இவரும் நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வகீஸ், கெளரி கிஷன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு