மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 

The-DMK-has-filed-a-defamation-case-against-the-state-election-commissioner-in-supreme-court

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தல் நடத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Advertisement

மேலும் இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இடஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்தாததால் தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement