சென்னையில் லாட்டரி விற்பனை.. புதிய தலைமுறையின் கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரியால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் 3 நம்பர் மற்றும் 4 நம்பர் லாட்டரி விற்பனை நடப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது.


Advertisement

லாட்டரிச் சீட்டால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து 2003-ஆம் ஆண்டு அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. அதை மீறி தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணமிருந்தன. ஆனால் விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Advertisement

இந்த நிலையில் தலைநகர் சென்னையிலும் 3 மற்றும் 4 நம்பர் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறப்பது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலிகிராமம், போரூர், குன்றத்தூர், பாடி உள்ளிட்ட இடங்களில் பூடான் மற்றும் கேரள லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. பூடான் லாட்டரி 3 நம்பரிலும், கேரளா லாட்டரி 3 மற்றும் 4 நம்பரிலும் விற்கப்படுகிறது.

பூடான் லாட்டரியின் விலை 70 ரூபாய். கேரளா லாட்டரி 3 நம்பர் 80 ரூபாய்க்கும், 4 நம்பர் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பூடான் மற்றும் கேரள லாட்டரிகளில் பரிசு விழுந்தால் 100 முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். வாட்ஸ்அப் மூலம் லாட்டரி விற்பனை நடக்கிறது. பணப்பரிமாற்றங்கள் கூகுள் பே மூலம் நடைபெறுகின்றன.


Advertisement

பெரும்பாலும் 3 மற்றும் 4 நம்பர் லாட்டரிகளை வாங்குவது விளிம்பு நிலை மனிதர்களே. எப்போதாவது பூனை அளவிற்கு சிறிய தொகையை பரிசாகப் பெறும் அவர்கள், இழப்பதோ யானை அளவிற்கான பெரும்பணம். மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்து கொண்டிருக்கிறோம் எனத் தெரியாமலேயே நாள்தோறும் சிறுகச்சிறுக‌ தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த எளியவர்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement