ஃபாஸ்ட் டேக் அமல் முதல் சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி வரை ! #Topnews

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை. நெரிசல் மிகுந்த சுங்கச்சாவடிகளில் முதல் ஒரு மாதத்திற்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்படும் என அறிவிப்பு.


Advertisement

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது.

அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்.வடகிழக்கு மக்களின் மொழி, அடையாளம், உரிமை பாதுகாக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.


Advertisement

கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்.

சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி.


Advertisement

லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement