தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து தொடர்பாக, மாம்பலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று காலை சுமார் 4.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 450-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இரண்டாவது நாளாக இன்றும் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. கட்டிடத்தின் முன்பகுதியும் இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில்  கட்டட தீ விபத்து தொடர்பாக மாம்பலம் காவல்நிலையத்தில் இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement