ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க தயாராகும் வியாசர்பாடி இளைஞன் தான் கற்றதை தன் பகுதி ஏழை சிறுவர்களுக்கு கற்பித்து அசத்தி வருகிறார்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சிறு வயது முதலே குத்துச் சண்டையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார். அவர் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளார்.
2010 முதல் 2013 வரை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் சோதனை போட்டியில் பங்கேற்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை லட்சியமாக கொண்டு ஒலிம்பிக் போட்டிக்காக தன்னை தயார் செய்து வருகிறார். அதற்குமுன் தான் கற்ற குத்துச்சண்டையை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கற்பித்து வருகிறார். அந்த இளைஞர்களிடம் தான் குத்துச் சண்டையின் மீது ஆர்வம் செலுத்தி அதன் மூலம் பெற்ற வெற்றியால்தான் ரயில்வேயில் தனக்கு வேலைகிடைத்தது என அவர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்து வருகிறார்.
வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றால் கஷ்டப்பட வேண்டும் எனக்கூறும் இவர், ஒலிம்பிக்கில் சாதனை புரிவதே தனது லட்சியம் எனக் கூறுகிறார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!