கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மக்கள் நீதி மய்யத்தின் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உணர்த்துவதாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.
கிராமசபை நடத்துகிறேன் என்று ஏக பில்டப்போடு அரசியல் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனாக, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதலமைச்சர் இருக்கையை கணக்கு போட்டுவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துவிட்டு பின்னங்கால் பிடரியில்பட கமல்ஹாசன் ஓடுகிறார் என்றால், அது அடுத்தவர் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம் என நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது. எனவே கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறது என நமது அம்மா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!