எந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திட்டமிட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு ‌கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் ‌நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படாமல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 9-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டன. இதில் வார்டு மறுவரையறை, உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஒதுக்கீடு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றமும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே தேர்தல் நடைபெற வேண்டும் என ஆணையிட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி ஏற்கெனவே கடந்த 09-ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அட்டவணையின்படி எந்தவித மாற்றமும் இன்றி தேர்தல் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளது


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement