தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் கிராமத்தை சேர்ந்த பார்வையற்றவரான ரத்தினபாண்டி, இவரது மனைவி தேன்மொழி ஆகியோருக்கு பிறந்தவர் அன்புராஜ். கூலித் தொழிலாளர்களான இவர்களின் ஒரே மகன் என்பதால் அன்புராஜை பாசத்தோடு வளர்த்தனர். பள்ளிப் பருவத்தில் அன்புராஜின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. அன்புராஜ் படிப்படியாக திருநங்கையாக மாறினார். தனது பெயரை அன்பு ரூபி என மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில், அன்பு ரூபி பி.எஸ்.சி., நர்சிங் படிப்பு முடித்து மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக பல்வேறு பொறுப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்டார். பின்னர் செவிலியராக தேர்வு செய்யப்பட்டு, நாட்டில் முதன் முறையாக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. அண்மையில் சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பழனிச்சாமியிடம், திருநங்கை அன்புரூபி தனது பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.
இதையெடுத்து அவருக்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையெடுத்து அன்புரூபி நேற்று விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தனது பணியை தொடங்கினார். பணிக்கு வந்த அன்புரூபிக்கு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Loading More post
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'