"ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும்" ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Parents-should-brought-up-male-kids-with-good-thoughts--says-Tamilisai-Soundarrajan

பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதைப் போல, ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Advertisement

Image result for tamilisai soundararajan

தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார். 


Advertisement

Image result for dr priyanka reddy

சமுதாயத்தில் பெண்களை குத்துவிளக்கு என்று கூறிக்கொண்டு கொள்ளிக்கட்டையாக்குகிறார்‌கள் என்று கவலையுடன் தமிழிசை குறிப்பிட்டார்‌. ஆபாசப் படங்கள் பார்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் என்று வரும் தகவல் பெரும் வேதனையளிப்பதாக அவர் கூறினார். இவற்றின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக குறிப்பிட்டார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை‌கள் குறித்து சுட்டிக்காட்டிப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஒரு கட்டத்தில் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement