“பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்”- அமைச்சர் காமராஜ் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பண்ணை பசுமைக் கடைகளில் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் விநியோகிக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Advertisement

தொடர் மழையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால் அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே பொதுக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 


Advertisement

மத்திய அரசும் தமிழக அரசும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியுள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பதிவில், துருக்கி எகிப்து நாடுகளிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்யும் வெங்காயம், வரும் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் தமிழகம் வந்து சேரும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement