நாடாளுமன்ற கேண்டீனில் இனி மலிவு விலையில் எம்பிக்களுக்கு உணவு கிடைக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற கேண்டீனில் மிக மலிவான விலையில் உணவு பொருட்கள் விற்கப்பட்டன. இது குறித்து சர்ச்சை வெடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் உணவு பொருட்களின் விலை ஓரளவுக்கு அதிகரித்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்பிக்களுக்கு சலுகை விலையில் உணவு கிடையாது என்று தகவல் வெளியாகியுள்ளது. கேண்டீனுக்கு ஒதுக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்ய எம்பிக்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கேண்டீனில் உள்ள உணவுகள் இனி உரிய விலையில் விற்கப்படும் என தெரிகிறது.
இதன் மூலம், மானியம் ரத்து செய்யப்பட்டதால் ரூ.17 கோடி ஆண்டு தோறும் சேமிக்கப்படும். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், நாடாளுமன்ற ஊழியர்கள், பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் என தினமும் சராசரியாக நாடாளுமன்ற கேண்டீனில் 4,500 பேர் உணவருந்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"ஈம சடங்கு நிகழ்ச்சிக்காவது அனுமதி கொடுங்க” - தெருக்கூத்துக் கலைஞர்கள் கோரிக்கை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
ப்ளஸ் 2 மொழிப்பாடத் தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?