மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடுமையான நெருக்கடிகள் கொடுத்து வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள கால்நடை விற்பனை தடைச்சட்டத்தை ஏற்க முடியாது என்று அறிவித்த பினராயி விஜயன், அச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், இப்பிரச்னையில் அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசின் இந்த உத்தரவு, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பது, ஏழை மக்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்தை கிடைக்காமல் செய்யும் நடவடிக்கை எனவும், புதிய விதிமுறைகளால் இறைச்சிக் கூடங்களின் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகள் மாநில உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!