விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்து நாசா புகைப்படங்கள் வெளியிட்டது. இதற்கு மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் நாசாவுக்கு உதவினார். செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த சுப்பிரமணியன், நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளார்.
தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இமெயில் அனுப்ப, சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர். இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என சண்முக சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
''நாசா எடுத்த நிலவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்தேன். ஒரே ஒரு சிறிய புள்ளியைத் தவிர வேறு மாற்றங்கள் தெரியவில்லை. எனவே அந்தப் புள்ளிதான் லேண்டரின் பாகங்களாக இருக்குமென அக்டோபர் 3ம் தேதி நாசாவுக்கு ட்வீட் செய்தேன். இது தொடர்பாக மின்னஞ்சலும் அனுப்பினேன்.
என் கண்டுபிடிப்பு குறித்து நாசா பதில் அளிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் தொடர்ந்து எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்து பின்னர் என்னுடைய தகவலை வைத்து ஆராய்ச்சி செய்தபோது நாசாவினால் எளிதாக விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க முடிந்தது.
செப்டம்பர் 17ல் நாசா எடுத்த புகைப்படத்தில் இருளில் எடுக்கப்பட்டது. அதனால் அவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்குப் பின் அக்டோபர் 15ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லேசான வெளிச்சம் இருந்தது. ஆனால் நாசாவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அக்டோபரில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே அந்தப் புள்ளியைக் கண்டுபிடித்தேன்.
பின்னர் நாசா, நவம்பரில் எடுத்த புகைப்படத்தை வைத்து லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். லேண்டர் தரையிறங்கிய குறிப்பிட்ட இடமெல்லாம் எனக்கு தெரியாது. நான் இணையத்தில் தகவல்களை சேகரித்தேன். அதன் மூலமே ஆய்வைத் தொடர்ந்தேன்'' என தெரிவித்துள்ளார்.
Loading More post
ஆதரவாளர்களுடன் ஆலோசனை: பாஜகவில் இணைகிறாரா புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்?
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!