அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தை எதிர்த்து வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் கூட்டுறவு சங்கத்தின் விதிகளை பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ண மூர்த்தி நியமிக்கப்பட்டது செல்லாது. தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement