சிறைக் கைதிகள் தயாரித்த மலிவு விலை எண்ணெய், ஆடைகள் விற்பனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறைக் கைதிகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகள், பெட்ஷீட், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள‌ன. இதனை பொதுமக்களும் காவல்துறையினரும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.


Advertisement

சிறைக்கைதிகளின் கைவண்ணத்தில் உருவான ஆடைகள், செக்கில் ஆட்டி தயாரிக்கப்பட்ட நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, சோப்பு, பெட்ஷீட் முதலியவைகள் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்கள் உள்ளிட்டோர் நேற்று அவற்றை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

 


Advertisement

ஒரு சட்டை 300 முதல் 400 ரூபாய் வரைக்கும், தேங்காய் எண்ணை, நல்லெண்ணை உள்ளிட்டவைகளையும் மலிவான விலைக்கு வாங்கிச் சென்றனர். இதேபோன்று திருச்சி,‌ மதுரை, சேலம், நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதுமுள்ள காவல் ஆணையர் அலுவலகங்களில் சிறைக்கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement